உதயநிதியும் நடித்தார் அப்படி என்றால் அவரைக் கூத்தாடி என்று சொல்லலாமா.? திண்டுக்கல்லில் இயக்குநர் பேரரசு விளாசல்.....


விஜய் நடத்திய இரண்டு மாநாடும் வெற்றிதான். விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார். விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதால் சந்தோசம் அடைய வேண்டும். ஏனெனில் சிலர் சொல்வது கூட இல்லை. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பாரபட்சம் பார்க்கின்றனர். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்து கூறுகின்றனர். ஆனால் தீபாவளி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில்லை. இந்து மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு இல்லை சிறுபான்மையினர் ஓட்டு வாங்குவதற்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை.


எம்ஜிஆர் போன்ற செல்வாக்கு மிகுந்த நடிகரை பார்க்க முடியாது. அவரையே கூத்தாடி என கூறினார்கள். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தவுடன் மலையாளி என கூறினார்கள். இன்று விஜயை கூத்தாடி எனக் கூறுகின்றனர். எம் ஜி ஆர் -யை கூத்தாடி என கூறியதால் அவர் இறங்கி போகவில்லை. தோற்றுப் போகவில்லை. சிவனும் கூத்தாடிதான் கூத்தாடி என்றால் அவமானமா உதயநிதியும் நடித்தார் அப்படி என்றால் அவரைக் கூத்தாடி என்று சொல்லலாமா? துணை முதலமைச்சராக உள்ளார் துணைக் கூத்தாடி என கூறலாமா? விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான் " என இயக்குனர் பேரரசு கூறினார்.

Post a Comment

0 Comments