நெல்லை: பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கிடந்த பணம்..... போலீசில் ஒப்படைத்த முதியவருக்கு எஸ்.பி. பாராட்டு..... - MAKKAL NERAM

Breaking

Thursday, August 7, 2025

நெல்லை: பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கிடந்த பணம்..... போலீசில் ஒப்படைத்த முதியவருக்கு எஸ்.பி. பாராட்டு.....

 


திருநெல்வேலி மாவட்டம், அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் (வயது 65) என்பவர் முக்கூடல் பஸ் ஸ்டாண்டில் கீழே கேட்பாரற்று கிடந்த பேக்கை திறந்து பார்த்த போது அதில் ரூ.48,500 பணம் இருந்துள்ளது. அப்பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு வந்து நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.


மேலும் இதுதொடர்பாக சேரன்மகாதேவி காவல்துறையினர் விசாரித்த போது, அந்த பணம் ஆலங்குளம், புதுபட்டியை சேர்ந்த செல்வகுமாரி என்பவருடையது என்று தெரியவந்தது. இதனையடுத்து செல்வகுமாரியை சேரன்மகாதேவி காவல் நிலையம் வரவழைத்து, அவர் தவறவிட்ட பணத்தை போலீசார் உரிய முறையில் ஒப்படைத்துள்ளனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த முருகனை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

No comments:

Post a Comment