திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 13, 2025

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம்

 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.


அந்த வகையில், திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முருக பக்தர்கள் வருகை தந்தனர். ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருக பக்தர்கள், சீடர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.


நெற்றியில் திருநீறு அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். இவர்கள் ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்பட 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment