• Breaking News

    ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட மோதல்...... அரசு பள்ளி மாணவர்கள் 13 பேர் கைது......

     


    நெல்லை மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் சில மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் சக மாணவர்களுடன் குழுவாக சேர்ந்து செல்போனில் ‘ப்ரீ பயர் கேம்’ எனப்படும் ‘ஆன்லைன்’ விளையாட்டில் ஒன்றாக விளையாடி வந்தனர். 

    நேற்று காலை ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருகோஷ்டிகளாக பிரிந்து தாக்குவதற்கு முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளியின் தலைமையாசிரியர் உடனடியாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 13 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் அனைவரையும் கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

    No comments