உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து.....15 பேர் படுகாயம்

 


ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பஸ், சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்து இரண்டு கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments