பழனி அருகே குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது...... 18 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி DSP.தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி, சார்பு ஆய்வாளர் கணேசன், காவலர்கள் இளம்பரிதி, கார்த்திக்ராஜா, ராம்நாத் ஊர்க்காவல் படை வீரர் மதன்குமார் ஆகியோர் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது R.R.மில் அருகே கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்த நெய்க்காரப்பட்டி சேர்ந்த முருகவேல் மகன் விக்னேஷ்(30) என்பவரை கைது செய்து கடையிலிருந்து ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 18 கிலோ குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் P.S.சுதா
No comments