நாகை: வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

 


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேதாமிர்த ஏரியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வரும் மக்களின் பொழுதுபோக்கிற்கு பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மிதி படகு, துடுப்பு படகு மற்றும் வாட்டர் சைக்கிள் இயக்குதல் போன்ற படகு சவாரி இயக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் படகு சவாரி இயக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதனைத் தொடர்ந்து வேதாமிர்த ஏரியில் படகு சவாரியானது மிக விரைவில் தொடங்கவும், அதற்கான பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்நிகழ்வின்போது வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி வேதாரண்யம் நகராட்சி ஆணையர்  த.சித்ரா சோனியா  மாவட்ட மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments