• Breaking News

    பழனி கோவிலில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

     


    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் மலையில் அமைந்திருப்பதால் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று முருகனை வழிபடும் நிலை இருந்தது. இந்த நிலையில் மலையேறிச் சென்று முருகனை தரிசிக்க சிரமப்படும் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    இந்ந நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப்கார் சேவை நாளை (19.9.2025, வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஆதலால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் விஞ்ச் பயன்படுத்தி செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    No comments