கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரிழப்பில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.வரும் சனிக்கிழமை வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் பரப்புரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது அந்த நிகழ்ச்சிகள் நடைபெறாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் நேரடியாக உத்தரவு வழங்கியுள்ளார். அதன்படி, கட்சியின் மறு அறிவிப்பு வரும் வரை எந்தவிதமான பரப்புரை முன்னேற்பாடுகளும் செய்யக் கூடாது என்றும், போலீசாரிடம் முன் அனுமதி கடிதம் அளிக்க வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, தவெக தொண்டர்களும், பொதுமக்களும் இடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.


0 Comments