• Breaking News

    இன்ஸ்டாவில் பழக்கம்..... பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

     


    சென்னை பிராட்வே, டேவிட்சன் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் பள்ளிக்கு சென்ற மாணவியை சஞ்சய் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் சஞ்சையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    No comments