• Breaking News

    வடசென்னையின் வளர்ச்சி திட்டப் பணி...... மேயர் பிரியா ஆய்வு

     


    பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்கு உட்பட்ட பகுதிகளில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள், சாலை வெட்டுக்கள் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வார்டு-74க்கு உட்பட்ட புதிய வாழை மாநகர் பகுதியில் உள்ள 1 முதல் 9 வரையிலான தெருக்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள், சாலை வெட்டுக்கள் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றினையும், செல்வபெருமாள் கோயில் தெருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், சாலை வெட்டுக்கள் சீரமைப்புப் பணிகள் தொடர்பாகவும் இன்று (16.9.2025) சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி பணிகளை மேற்கொண்டு விரைந்து முடித்திடவும், பணிகள் முடிந்தவுடன் உடனடியாக சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக அவற்றை சரிசெய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது மண்டல அலுவலர் சொக்கலிங்கம், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    No comments