நாகை அருகே பட்டமங்கலம் சொட்டால்வண்ணம் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணிமாத குத்துவிளக்கு பூஜை


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆவணிமாதத்தை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது. 

ஆலயத்தை சுற்றி அகல் விளக்கு ஏற்றி வைத்த பெண்கள் திருமண மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் பிரார்த்தனை செய்து குத்துவிளக்கினை அம்மனாக பாவித்து 1008 வேத மந்திங்கள் ஓதி திருவிளக்கேற்றி குங்குமம், பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். 

தொடர்ந்து செல்லமுத்து மாரியம்மன், காளியம்மன், அய்யனார், கன்னியா குறிச்சி, பெரியாச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் கும்மியடித்து அம்மனை மனமுருகி வழிபாடு செய்தனர்.

நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி


Post a Comment

0 Comments