பெரியகுளம் நகராட்சி 29வது வார்டு சிறப்பு வார்டு சபை கூட்டம் கவுன்சிலர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது


 தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 29 வது வார்டு பகுதியில் நகர்மன்ற உறுப்பினரும் , அதிமுக தேனி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான  வி.முத்துலட்சுமி தலைமையில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில், 29 வது வார்டு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அப்பகுதிக்கு தேவையான  அடிப்படை வசதிகள் குறித்தும் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

 இதில் அர்ஜுனர் தேவர் சந்துப் பகுதிக்கு சாலை வசதியும் பாதாள சாக்கடை வசதியும், மாதா கோவில் தெருவிற்கு மழை நீர் வடிகால் வசதியும் , குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைத்து தர கோருதல், தேவர் சிலை அருகில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர கோருதல், தெற்கு புதுத் தெருவில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தி தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 நகர்மன்ற உறுப்பினர் இதுவரை நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை பட்டியலிட்டு பேனர் மூலம் பொதுமக்களிடையே  தெரியப்படுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார். இந்தக் கூட்டத்தில் மறவர் சங்கத் தலைவர்  ராஜகோபால் மற்றும் சேகர், தங்கவேல் என பலரும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments