மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சிறந்த சுற்றுலா இடமாக பேரிஜம் ஏரி பகுதி விளங்குகிறது. இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இந்த ஏரியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் ஏரி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதேபோல் தீபாவளி பண்டிகையையொட்டி வனத்துறை தற்காலிக ஊழியர்கள் விடுமுறை எடுத்துள்ளனர். இதையொட்டி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் என 2 நாட்கள் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
22-ந்தேதி முதல் வழக்கம்போல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கொடைக்கானல் வனச்சரகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
0 Comments