தமிழகத்தில் குத்தகை காலம் முடிவடைந்தும் சில தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் அரசு நிலங்களை காலி செய்யாமல் அவற்றை பயன்படுத்து வருகின்றனர். இதுபோன்ற நிலங்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையின் ஆலந்தூரில் குத்தகை காலம் முடிந்து நிலத்தை காலி செய்யாமல் அதில் ஓட்டல் அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலத்தை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர்.
ஆலந்தூரில் பிரபலமான தனியார் ஓட்டல் 15 கிரவுண்டு அரசு நிலத்தில் செயல்பட்டு வந்தது. குத்தகை காலம் முடிந்து அந்த ஓட்டல் செயல்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் நிலத்தை அரசு கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தவை தொடர்ந்து இன்று காலை தனியார் ஓட்டல் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற அதிகாரிகள், ஓட்டலில் இருந்த ஊழியர்களை வெளியேற்றினர். மேலும், ஓட்டலின் பெயர் பலகையை அகற்றிய அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும், ஓட்டல் செயல்பட்டு வந்த 15 கிரவுண்டு அரசு நிலத்தை மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 300 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments