பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் சென்றார். நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தாங்கினார். தையடுத்து பேராவூர் பகுதியில் இன்று காலை நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் கலநதுகொண்டார்.
அப்போது 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட நடந்து முடிந்த ரூ.738 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தை அடுத்த புல்லங்குடி பகுதியில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை தி.மு.க. கொடிகள் இருபுறமும் கட்டப்பட்டு உள்ளன.
சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ., கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

0 Comments