தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியில் வார்டு சபா கூட்டம் கவுன்சிலர் மு.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் அந்த வார்டு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை வசதி, குடிநீர் குழாய், பெண்களுக்கான கழிப்பறை, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர கவுன்சிலர் என்ற முறையில் முன் நிற்ப்பேன் என்றும் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் கவுன்சிலர் மு.தேவராஜ் விரிவாக எடுத்துரைத்தார் . பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கீதா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமான என ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் . பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

0 Comments