வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசன பகுதிக்காக தண்ணீர் திறப்பு

 


தேனி மாவட்டம், வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக, பெய்த கனமழையால், அணையின் முழு கொள்ளளவு எட்டப்பட்டு உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு அரசாணை வெளியிடப்பட்டது. 

இன்று (27.10.2025) வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 2500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரத்துறை ) உதவி செயற்பொறியாளர் சேகரன், உதவிப் பொறியாளர் பரதன், பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரத்துறை) பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  தண்ணீர் திறந்து விடப்படும் முதல் (27.10.2025) நாளிலிருந்து ஐந்தாம் நாள் (31.10.2025) வரை படிப்படியாக  கண்ணீரின் கன அடி குறைக்கப்பட்டு திறந்து விடப்பட உள்ளது.

Post a Comment

0 Comments