சென்னை ஆவடியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும் அதுபற்றி கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments