திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அனாமிகா ரமேஷ் IAS மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோருடன் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.
தொடர்ந்து R.M.காலனி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் உள்ள சமுதாயக்கூடம் பணிகள் குறித்தும், மாநகராட்சி அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் சரி செய்ய தயார் நிலையில் இருக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்தும் ராஜலட்சுமி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் குறித்தும் R.M.கால்னி 8 வது குறுக்கு தெரு பகுதியில் 24*7 திட்டத்தின் கீழ் நீர் அபிவிருத்தி பணிகள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் குறித்தும், வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை புனரமைக்கும் பணிகள் குறித்தும், R.M.காலனி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடம் அருகில் உள்ள நூண்ணூர செயலாக்க மையப் பணிகள் குறித்தும்நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அனாமிகா ரமேஷ் IAS ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நகர் நல அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

0 Comments