திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று உயரம் தடைபற்றோர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் சார்பாக உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்த அரசின் அனைத்து திட்டங்களை வழங்க வேண்டும், சிறப்பு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும், மாதாந்திர உதவித் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 Comments