துருக்கி நாட்டில் உயிரிழந்த தமிழக பொறியாளரின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்..... மத்திய அரசுக்கு பி.எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்......


நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் கணபதி மகன் சிவகுமார் சென்னை திருவான்மியூர் பகுதியில் குடும்பத்தோடு வசித்துவந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு மும்பையில் உள்ள தனியார் கப்பல் கம்பெனியில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 20 ஆம் தேதி தீபாவளிக்கு, இவரது மனைவி லீனாபிரியாவுக்கும்,தூத்துக்குடியில் உள்ள அவரது தாய்க்கும் மற்றும் உறவினர்களுக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிவக்குமார் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது சிவக்குமார் திடீரென இறந்து விட்டதாக சம்பந்தப்பட்ட தனியார் கப்பல் நிறுவனம் தகவல் தெரிவித்தது.

தனியார் கப்பல் கம்பெனியில் பணிக்கு சேர்வதற்கு முன்பு உடல் தகுதி அடிப்படையில் தான் சேர்க்கப்படுவார்கள். அப்படி உடல் தகுதி பெற்ற சிவக்குமார் திடீரென்று இறப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. 

இது குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் இறந்தவர் உடலை சென்னைக்கு கொண்டு வர வெளி விவகாரத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துருக்கி நாட்டில் மரணமடைந்துள்ள  சிவகுமார் உடலை கொண்டுவர பாரத பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு  கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments