இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் கலைவாணி (41). இவர் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.
குருபூஜை பாதுகாப்புப் பணிக்காக இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு இவர் வந்திருந்தார்.நேற்று (அக். 28) இரவு பணியில் இருந்த கலைவாணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாதுகாப்புப் பணியின்போது பெண் தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணமடைந்த இந்தச் சம்பவம், காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments