தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுருளி, பொருளாளர் பன்னீர்செல்வம், மக்கள் நல பணியாளர் சங்க நிர்வாகி சுதர்சனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை சிறப்பு நிலை தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5000, பணிக்கொடை ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும் தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    

நிருபர்: மு.அழகர்.

Post a Comment

0 Comments