ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை புதிய மாவட்ட அலுவலகம் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது


ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படவுள்ள புதிய மாவட்ட அலுவலகம் கட்டிட பூமி பூஜை  நடைபெற்றது. முக்கிய பங்கேற்பாளர்கள் இந்த பூமி பூஜை நிகழ்விற்கு ஈரோடு தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

உடன், உதவி மாவட்ட அலுவலர்கள் கலைச்செல்வன், கணேசன் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய அலுவலகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்புக்கு 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .



Post a Comment

0 Comments