தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி பெய்த கனமழையால், குடிநீர் விநியோகக் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் குடிநீருக்காக மக்கள் தவித்தனர்.
நிலைமையைப் போக்க, பேரூராட்சித் தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் உடனே களமிறங்கி, ஊழியர்களுடன் இணைந்து 500 மீட்டர் கருப்பு os , 500 மீட்டர் கேபிள் வயர் மற்றும் சிஏ புதிய பைப் புதிதாக பயன்படுத்தி, குறுகிய காலத்திலேயே புதிய குழாய்களைப் பதித்தார்.
தலைவரின் துரித நடவடிக்கை மூலம் குடிநீர்த் தட்டுப்பாடு உடனடியாக நீக்கப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரை மனதாரப் பாராட்டினர். மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் தேவை எனப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

0 Comments