1 ரூபாய்க்கு டிக்கெட்..... 'சென்னை ஒன்' செயலியில் சலுகை

 


சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை நகரின் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளுக்கான ஒரே செயலியான ‘சென்னை ஒன்', பயணிகளுக்கு ஒரு சிறப்புச் சலுகையை வழங்குகிறது. அதன்படி, பயணிகள் ‘பிம்' (BHIM) பேமெண்ட் செயலி அல்லது ‘நவி' (Navi) யு.பி.ஐ. மூலமாகப் பணம் செலுத்தும்போது, பஸ், மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் ரெயில் டிக்கெட்டுகளை வெறும் ரூ.1-க்கு பெறலாம்.

இந்த சலுகையானது இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது. அனைவரும் வேகமான, ரொக்கமில்லா பொதுப் போக்குவரத்தை முயற்சித்துப் பார்ப்பதற்காக இந்த சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1 சலுகையை பெறுவதற்கு சென்னை ஒன் செயலியை திறந்து, அதில் 'பிம்' (BHIM) பேமெண்ட் செயலி அல்லது ‘நவி' (Navi) யு.பி.ஐ. செயலியைப் பயன்படுத்திப் பணம் செலுத்துதலை நிறைவு செய்ய வேண்டும்.

அப்போது ரூ.1 கட்டணம் கிடைக்கும். இந்த சலுகையை ‘சென்னை ஒன்' செயலி கணக்கில் ஒரு முறை மட்டுமே (பஸ், மெட்ரோ அல்லது புறநகர் ரெயில் - இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு) பெற முடியும். அடுத்தடுத்த பரிவர்த்தனைகளுக்கு ஆச்சரியமூட்டும் பணத்தைத் திரும்பப் பெறுதல் (கேஷ் பேக்) சலுகைகளை பெறமுடியும். இந்த சலுகை குறித்த முழு விதிமுறைகளும் ‘சென்னை ஒன்' செயலியில் கிடைக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments