கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக செயல்பட இருந்த நபர்களை தட்டி தூக்கிய காரைக்குடி வடக்கு காவல் நிலைய காவல்துறையினர்


 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 21.3.2025 அன்று  காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்த மனோ என்ற மனோஜ் குமார், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான 100 அடி சாலையில் , காரைக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குருபாண்டி மற்றும் சில நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர்கள் குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர், மேற்படி கொலை சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக இறந்த மனோஜ் குமார் என்பவரின் சகோதரரான குணா மற்றும் ஏழு நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கொலை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டி தயாராக இருந்து வந்த நிலையில், காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து மூன்று வாள்கள், கார் ஒன்று, ஆறு செல்போன்கள் கைப்பற்றப்பட்ட நிலையில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுமேற்படி நபர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments