சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் இது தான்....

 


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மின்சார ரெயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைதவிர மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயில், ஏசி மின்சார ரெயில்கள் உள்ளிட்டவற்றையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் மக்களின் வசதிக்காக பொதுப் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை பெருநகரத்திற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொதுப் போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA)வெளியிட்டுள்ளது. மேலும் திட்டங்களுக்கான பரிந்துரைகளை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:-


* சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளில் சென்னையில் 346 புதிய பேருந்து நிறுத்தங்கள், 30 புதிய பஸ் டிப்போக்கள்.


* தாம்பரம்-அடையாறு, பெருங்களத்தூர் மாதவரம் (புறவழிச் சாலை வழியே) புதிய மெட்ரோ வழித்தடங்கள்.


* கோயம்பேடு - பூந்தமல்லி, பல்லாவரம் குன்றத்தூர், வண்டலூர் - கேளம்பாக்கம் வழித்தடங்களில் நியோ மெட்ரோ சேவை.


* எண்ணூர் - சிங்கப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் ஆகிய புதிய வழித் தடங்களில் புறநகர் ரயில் சேவை.


* தியாகராய நகர்-நுங்கம்பாக்கம்-நந்தனம் - லைட் ஹவுஸ் இடையே டிராம் சேவை.


* சென்ட்ரல் - கோவளம் - மாமல்லப்புரம் தடத்தில் இரு கட்டங்களாக வாட்டர் மெட்ரோ சேவை.


* சென்னை துறைமுகம்-பரந்தூர்-மாமல்லபுரம் திருப்பதியை மையமாக கொண்டு மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் ஏர் டாக்ஸி சேவை.

Post a Comment

0 Comments