நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருந்த ’கும்கி 2’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

 


பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் தடைகோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் 'கும்கி'. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார்.

கும்கி 2 திரைப்படம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் வழக்கு தொடர்ந்துள்ளார். கும்கி 2 படத்துக்கு பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடியை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கும்கி 2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Post a Comment

0 Comments