திண்டுக்கல்: சட்டத்தை மீறி கள்ளக்காதல் ஜோடியை சேர்த்து வைத்த பெண் சப் இன்ஸ்பெக்டர்..... 4 குழந்தைகள் தவிப்பு....

 



திருமணமான பெண்ணும், இரண்டு குழந்தைகளின் தந்தையுமான இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கை கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி (22), தனது தாய் மாமனை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஊரில் நடந்த திருவிழாவிற்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா (24) என்பவர் வந்திருந்தார். அவருக்கும் திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருவிழாவில் ஏற்பட்ட அறிமுகம் நட்பாகவும், பின்னர் நெருக்கமான தொடர்பாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. செல்பேசியில் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்ததால், வைஷ்ணவியின் குடும்பத்தினருக்கும், கணவருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனை அவர்கள் கண்டித்தும், இருவரும் தங்கள் கள்ளத் தொடர்பைத் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல சூர்யாவின் வீட்டிலும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததால் தகராறு ஏற்பட்டது. பின்னர், இருவரும் தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் விட்டு வெளியேறி திருப்பூரில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இரு குடும்பங்களும் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இருவரையும் தேடும் பணி நடந்தது. அவர்கள் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிந்ததும், போலீசார் சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி இருவரிடமும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், வைஷ்ணவியின் கணவர் மற்றும் உறவினர்கள், சூர்யாவின் குடும்பத்தினரும் நிலையத்திற்கு வந்து இருவரையும் குடும்பத்திற்காக திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், வைஷ்ணவி தன் கணவருடன் செல்ல விருப்பமில்லை என்றும், சூர்யாவுடன் வாழ விரும்புவதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜோடியை அவர்கள் விருப்பப்படி அனுப்பிவைத்ததாக தெரிகிறது.

மேலும் நான்கு குழந்தைகள் தற்போது பரிந்துரைப்பில் இருக்கும் நிலையில் குடும்ப நலன் கருதி இது போன்ற விவகாரங்களில் போலீசார் இருவருக்கும் தனித்தனியாக அறிவுரை வழங்கி குடும்பத்தினருடன் அனுப்பி வைக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெறாமல் இருக்கும் நிலையில் காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் கள்ளக்காதல் ஜோடியை சேர்த்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments