காரைக்கால்: தேசிய மாணவர் படையின் 78 வது உதய தின விழா...... தேசிய மாணவர் படை மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்....


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தேசிய மாணவர் படையில் 78 வது உதய தின விழாவை முன்னிட்டு தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வைத்து சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பெற்றோர் சங்க தலைவர் Dr. LSP. சோழசிங்கராயர் சிறப்பு அழைப்பாளர்களாக எம்ஸ்டார் ரெரா ஏஜென்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் பொறுப்பாளர் சுரேஷ், செயலாளர் காளீஸ்வரி, ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் திரு.நிவின் மதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் படையின் 78 வது உதய தின நாளில் மாணவர்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை வைத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தூய மரியன்னை பள்ளியின் தேசிய மாணவர் படையின் அதிகாரி பிரான்சிஸ் சேவியர் சிறப்பாக செய்திருந்தார்.

Post a Comment

0 Comments