திண்டுக்கல் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்து..... ஒருவர் பலி



 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை கோவில் அமைந்துள்ளது. இதில் கார்த்திகை மாதத்தில், மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

இந்த கோவிலுக்கு ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து இருமுடி சுமந்து சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சிலர் கார் ஒன்றில் சென்றனர்.

அவர்கள் சென்ற கார் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அய்யப்ப பக்தர் லட்சுமிகாந்த் (வயது 36) என்பவர் உயிரிழந்து உள்ளார். 2 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments