உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை மெட்ரோ ரெயிலில் பாதுகாப்பாக பயணித்த நுரையீரல்

 


மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் மெட்ரோ ரெயில்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் கேரியேஜ் மற்றும் டிக்கெட் என்ற திருத்த விதிகள்-2023 கொண்டு வரப்பட்டது.

அதன்படி நேற்று மீனம்பாக்கம்- ஏ.ஜி.டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்பட்ட நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது. இந்த உடல் உறுப்பு பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மதியம் 2.07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை மருத்துவ குழுவினர் அடைந்தனர்.

மெட்ரோ ரெயில் ஊழியர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் உதவியுடன் அந்த மருத்துவ குழுவினர் 7 மெட்ரோ நிலையங்களை பாதுகாப்பான முறையில் கடந்து மதியம் 2.28 மணிக்கு ஏ.ஜி.டிஎம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மருத்துவ குழுவினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments