புதுக்கோட்டை: திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது...... நான்கு வருடமாக சாலை வசதி கேட்டு போராடும் குடுவையூர் கிராம மக்கள் கொந்தளிப்பு.....


புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி ஒன்றியம் நெற்குப்பம் ஊராட்சி குடுவையூர் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் சாலை வசதி இல்லாமல் வாழும் அவலம். இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில்,

ஒரு புறம் திராவிட மாடல் ஆட்சியில் திமுக அரசுக்கும் வெட்கக்கேடு மேடை பேச்சுக்கு தான் திராவிட மாடல் மற்ற படியாக செயலில் ஒன்றுமில்லை. பல நூற்றாண்டுக்கு பின்நோக்கிதான் குடுவையூர் கிராமம்  இருக்கிறது.

 விரைவில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப நேரம் நெருங்கி விட்டது, என்பது ஏழை எளிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசாக தான் இருக்கிறது . பல போராட்டங்களை நடத்தியும் ஏழை எளிய மக்களின் வாழ்வதரத்தில் மண்ணை அள்ளி போட்டு நடக்க சாலை இல்லாமால் அவதி படுகிறோம், பள்ளி மாணவர்கள் மாணவிகள் பள்ளிக்கு போக முடியாமல் அவசர காலங்களில் 108 கூட வரமுடியாமல் நோயாளிகள் உயிர் பலி ஆகி இருக்கிறார்கள்.இந்த அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்க முன்வருமா ?

மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாலையை பார்வையிடுவதும் சாலையை அளப்பது கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பணியைதான் செய்து வருகிறார்கள்.உங்களுடைய பொற்கால திராவிட மாடல் ஆட்சியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அய்யா அவர்கள் இனிமேலாவது பார்வையிடுவதையும் அளவை செய்வதையும் நிறுத்தி விட்டு தார் சாலை போட நடவடிக்கை எடுப்பீர்கள்?

என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 

குடுவையூர் பொதுமக்கள் மாணவ,மாணவிகளின் நலன் கருதி ஆட்சியாளர்கள் சாலை வசதி ஏற்படுத்தி தருவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post a Comment

0 Comments