தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அணி) சார்பில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்,வன்னியர்களுக்கு 10.5% சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,அதேபோல் அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், என வலியுறுத்தி இன்று 12.12.25 பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர் ராமதாஸ் அணி சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர் P.S.சுதா

0 Comments