தேனி மாவட்டம் போடி நகராட்சித் தலைவரான ராஜ ராஜேஸ்வரியின் கணவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான சங்கருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு நாட்களாகத் தீவிர சோதனை நடத்தினர்.
கேரளப் பங்குதாரர்களுடன் இணைந்து ஏலக்காய் வியாபாரம் செய்துவரும் சங்கர், கடந்த 7 மாதங்களில் மட்டும் ₹1,200 கோடி வரை ஏலக்காய் வியாபாரம் செய்ததாகவும், இதன் மூலம் ₹70 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறைக்குக் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் கிடங்கு, வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “போடி திமுக பிரமுகரான சங்கர் குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்து சுமார் ₹100 கோடிக்கு மேல் சொத்துகள் வாங்கி உள்ளனர். இது தொடர்பான சொத்துப் பட்டியலைத் தயாரித்து வருகிறோம். சங்கரின் மகன் லோகேஷ், வரி ஏய்ப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

0 Comments