திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது துர்க்கை அம்மன் கோவில் அருகில் ஒரு வாலிபர் போதை மாத்திரைகள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருச்சி மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த சிவபிரசாத் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு ரேஷன் கடை அருகில் போதை மாத்திரை விற்ற கோரிமேடு பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வம் (20) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

0 Comments