திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி ஆரணி பேருர் திமுக சார்பில் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி,தமிழ்நாடு தலைகுனியாது நிகழ்ச்சி 5-வது வார்டு பூத் எண் 247-ல் நகர செயலாளர் P.முத்து தலைமையில் அவைத்தலைவர் வழக்கறிஞர் G.ரமேஷ்,முன்னாள் செயலாளர் G.B.வெங்கடேசன்,டாக்டர் பாலா ஆகியோரின் முன்னிலையில் 11.12.2025 அன்று நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் M.S.K.ரமேஷ் ராஜ் கூறியதாவது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பை வழங்கி உள்ளார் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் அளவிற்கு நாம் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் திமுக அரசின் சாதனைகள் குறித்து பிரசுரங்கள் இன்று முதல் வீடு வீடாகச் சென்று தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் செய்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர்கள் D. கோபிநாத், T.நிலவழகன், பொருளாளர் கு.கரிகாலன் மற்றும் மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள்,வார்டு செயலாளர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,பூத்துக்குட்பட்ட கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





0 Comments