திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்குதல், ஏழை எளியோருக்கு நல திட்ட உதவிகள் மற்றும் இனிப்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது மேலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருவுடையம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, பொன்னேரி அகதீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களாக நோட்டுப் புத்தகம் பேனா பென்சில் ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர், மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சிறு கடை வியாபாரிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தலைமையேற்று நடத்திய ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் மாவட்ட இணை செயலாளர் ஆர்.சி.சேகர்,மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் அன்புச் செழியன், ஒன்றிய இணைச் செயலாளர்கள் வல்லூர் ரஜினிசுரேஷ், நீலகண்டன்,ரஜினி தர்மேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் படையப்பா ஏழுமலை,பொன்னேரி நகர செயலாளர் கணேசன்,நாலூர் இளைஞரணி செயலாளர் நாகராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தினர்.


0 Comments