அரியலூர்: உடையார்பாளையம் நகரில் ராம்சந்த் என்.ஆர்.பப்ளிக் பள்ளியில் 9 ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில் ராம்சந்த் என். ஆர்.பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம்  வருட  ஆண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.பள்ளியின் செயலாளர் இந்துமதி செல்வக்குமார், முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிறப்பு பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் ராமமூர்த்தி பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.விழாவின் முடிவில் பள்ளியின் முதல்வர் சக்தி வேல் அனைவரும் நன்றி கூறினார்.



Post a Comment

0 Comments