திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி,சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் P. பலராமன் அறிவுறுத்தலின் பேரில் ஆரணி நகர செயலாளர் A. M.தயாளன் ஏற்பாட்டில் அம்மா பேரவை செயலாளர் K. N.சீனிவாசன் நகர பொருளாளர் மா. சேகர் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9- ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவர்களின் திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி பேரூர் அதிமுக பொறுப்பாளர்கள் மாவட்டம், ஒன்றியம்,நகர நிர்வாகிகள். பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நகர வார்டு செயலாளர்கள், பிற அணிகளின் பொறுப்பாளர்கள்,மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 Comments