திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் கடைகளை வைத்து சிறு தொழில் செய்து வருகின்றனர். இவர்களை முறையாக நகராட்சி அலுவலகத்திற்கு தொழில்வரி கட்டி வரும் நிலையில் நகராட்சியில் வரி வசூல் செய்யும் ஆய்வாளர் கோபிநாத் என்பவர் குறிப்பிட்டு முடி திருத்தும் தொழிலாளர்களின் கடைகளுக்கு சென்று அதிக வரி கேட்பதாகவும், அடாவடித்தனமாக நடந்து கொள்வதாகவும் தங்கள் மரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் கடையின் முன் நின்று மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதாகவும் கூறி பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்பு கோபிநாத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பி நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்தனர்.
தங்களை அவமரியாதையாக நடத்தும் கோபிநாத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து வியாபாரிகளும் சேர்ந்து பெரும் போராட்டம் நடத்த கூடும் எனவும் எச்சரித்தனர்.

0 Comments