நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிர மடைந்து தொடர் கனமழை பெய்தது. குறிப்பாக டிட்வா புயல் காரணமாக 7 நாட்களாக தொடர்ச்சியாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சம்பா, தாளடி நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது மாவட்டம் முழுவதுமாக சுமார் 85 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கி சேதமான பயிர்களை பாஜக விவசாய அணி மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பட்டமங்கலம், வெண்மணி, சாட்டியக்குடி பகுதிகளில் ஆய்வு செய்த குழுவினர் விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி விவசாய அணி மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பிரதமரிடம் கொண்டு செல்வோம் என தெரிவித்தார். ஆய்வின் போது பாஜக மாவட்டத் தலைவர் விஜேயந்திரன், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் நிஜந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி


0 Comments