தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார்பந்தய வீரராகவும் நடிகர் அஜித் திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.இந்நிலையில், அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக உருவாகியுள்ள 'RACING ISN'T ACTING' ஆவணப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப்படம் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படைப்பாக இருக்கும் என்று இயக்குனர் ஏல்.விஜய் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments