மீஞ்சூர் ஒன்றிய அதிமுக புதிய மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.எஸ்.வினோத் குமாருக்கு அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்பு


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,ஒருங்கிணைந்த மீஞ்சூர் ஒன்றியத்தை பிரித்து மீஞ்சூர் ஒன்றியம் கிழக்கு,மேற்கு,தெற்கு என மூன்றாக பிரித்து அதற்கு புதிய ஒன்றிய செயலாளர்களை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி மீஞ்சூர் மேற்கு ஒன்றியத்திற்கு கிருஷ்ணாபுரம் ஜி.எஸ்.வினோத் நியமிக்கப்பட்டார்.

 மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனிடம் ஆசி பெற்றபின் அதிமுக கிளை கழக நிர்வாகிகளை சந்திக்கும் பொருட்டு மீஞ்சூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட   மெதூர். அரசூர். தோப்புக்கொள்ளி சோம் பட்டு பரிக்கப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் இருக்கின்ற கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு சால்வை சால்வை அனைத்து வாழ்த்து பெற்றார்  தமிழக அரசால் சாலை புதிய சாலைகள் போடப்படவில்லை எனவும் இன்னும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதாகவும் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தான் தற்போதும் தங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறி தாங்கள் இப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் பேச வேண்டும் என கூறினர்.

 அதற்கு அதிமுக மீண்டும் எடப்பாடி யார் ஆட்சி அமைக்கும் தருவாயில் இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படாது எனவும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாகவும் வினோத் கூறினார்.

 கிராமத்திலும் பொதுமக்கள் வினோத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் திருமலை . விவசாய அணி ஆறுமுகம் சேகன்யம் சீனு. சோம்பட்டும் தயாளன். தமிழரசு.உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments