தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு கட்டுப்பட்ட, அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தீபம் ஏற்றும் நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர். பொதுமக்கள் அரோகரா கோஷத்துடன் சிவனை வழிபட்டு, தீபச்சுடரை கண்டுகளித்து பக்தி பரவசத்தில் ஆழ்ந்து திளைத்தனர். இந்நிகழ்ச்சியில் , அறநிலையத்துறை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியிள் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் புதல்வர் பிரதீப் சாமி தரிசனம் செய்தார். தீபத் திருநாளை முன்னிட்டு கைலாசநாதர் திருக்கோயிலில் பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த தீபத் திருநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை, அன்பர் பணி செய்யும் குழுவினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.



0 Comments