திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய ஒன்றிய செயலாளர் டி.சி.மகேந்திரனின் கழக அலுவலகம் திறப்பு


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக நிர்வாக வசதிக்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவின் பேரில் அறிவித்தார் அதனை தொடர்ந்து கும்முடிபூண்டி தெற்கு ஒன்றிய செயலாளராக டிசி மகேந்திரன் அவர்களை நியமித்தது தொடர்ந்து கவரப்பேட்டையில் இன்று கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக அலுவலகம்  கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து கழக வளர்ச்சிக்கு பாடுபடுவோம் எனவும் 2026 எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை முதலமைச்சர் ஆக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து திமுக விசிக நாம்தமிழர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் கழகத்தில் இணைந்தனர் அப்போது அவர்களுக்கு சால்வை அணிவித்து கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் வரவேற்றார் தொடர்ந்து கழகப் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என அப்போது அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .

 இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் ரமேஷ்குமார், எஸ் எம் ஸ்ரீதர் ,வேதகிரி, கோதண்டம் எம் எஸ் எஸ் சரவணன். இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சேதுபதி. முக சேகர் ஓடை ராஜேந்திரன் எம் எஸ் எஸ் வேலு.பக்ரி பாய். பண்பாக்கம் சீனிவாசன். மஜித் பாய். பாசறை சரவணன். மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

Post a Comment

0 Comments