தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் கடந்த 4- 11 -2025 முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது .தேனி மாவட்டத்திலும் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் பலர் கல்லூரி மாணவர்களை வைத்தும், பள்ளி மாணவர்கள் மூலமாகவும் படிவங்களை பூர்த்தி செய்து வருவதில் ஏனைய பெயர்கள் விடுபட்டு வருவதாகவும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது.
மேலும், புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை தனியாக பிரித்து எடுத்துள்ள நிலையில், அவர்கள் பெயரினை சேர்க்க வேண்டும் என வாக்குச்சாவடி அலுவலர்களை கட்டாயப்படுத்துவது இந்த பணியின் நோக்கத்தை சிதைத்து விடும். எனவே புலம்பெயர்ந்தவர்களை பல கட்ட ஆய்வு செய்த பின்னரே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். ஆகவே தேனி மாவட்டம் முழுவதும் இந்த வாக்காளர் சிறப்பு தர பணியானது முறையாக எவ்விதமான தொய்வும் இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments