தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி பகுதியில், கடந்த சில தினங்களாக தெரு மின்விளக்கு பழுதடைந்து, மின் விளக்கு எரியாமல் இருந்துள்ளது. இருளில் தவித்த பொதுமக்கள் இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் அளித்த தகவலின் பேரில், மின்கம்பத்தில் இருந்த பழுதடைந்த தெருமின் விளக்கினை அகற்றி, புதிதாக மின்விளக்கு பொருத்தப்பட்டது.
இந்தப் பணிகளை பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராகவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்தார். அருகில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிராஜ், எண்டப்புளி ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
அடிப்படை வசதிகளான சாக்கடை கால்வாய் துர்வாரும் பணி, பழுதடைந்த தெரு மின்விளக்குகளை சீரமைக்கும் பணி உள்ளிட்டவற்ற குறைகள் மற்றும் கோரிக்கைகளை பொதுமக்கள் தகவல் அளித்த உடனுக்குடன் நிறைவேற்றி தர வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், ஊராட்சி செயலர் ஜெயபாண்டியனிடம் தெரிவித்தார். வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் ஆய்வு செய்து மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை மேற்கொள்ளுமாறு, ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவனின் பணி மகத்தானது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

0 Comments